Pages

Sunday, October 4, 2009

ஒருவழியாக.. மெல்ல எட்டிப் பார்த்தது..!

அதிகாலையில் முதலாவதாய் எழுந்து..
அனைவருக்கும் முன் சென்றமர்ந்து
காத்திருந்தேன்..

வெளியே வரவே இல்லை.. வெகுநேரமாகியும்..
பொருமையுடன் அமர்ந்திருந்தேன்..!

அவசரப்பட்டு எழுந்து சென்றால்..

அலுவலகத்திற்குச் செல்லும் போது..
பாதி வழியில் திரும்பி வரவேண்டும்.!

அதையும் கடந்து அலுவலகம் சென்றால்..
முக்கிய ஆலோசனையில் அனைவரும் முகம் சுழிப்பர்!


அதையும் சமாளித்தால்..
மாலை அலுவலகம் முடியும் வரை..
அதே நினைப்பாக.. எந்த வேலையும் ஓடாது!

வேலையில் பல குறைகள்.. உயர் அதிகாரியிடம்..
நெளிந்து கொண்டே திட்டு வாங்க வேண்டும்..

ஒரு வழியாக.. மாலை 6 மணிக்கு முன்பே அவசரமாக கிளம்பி..
சாலை விதிமுறைவிளக்குகளை மீறி..
காவல்துறை அதிகாரிக்கு தெண்டம் அழுது..

அப்பப்பா.. நினைத்தாலே....
நேற்றும்.. அதற்து முன்பும் நடந்தவைகள் கண்முன்னே வந்துசென்றது..

ஒரு முடிவோடு அமர்ந்திருந்தேன்..
பார்க்காமல் செல்வதில்லை என்று..

கொசுகடி வேறு...

பள்ளி நாட்களில் அடிவாங்கியதும்..
'முயன்றால் முடியாதது எதுவுமில்லை' என ஆசிரியர் உரைத்ததும்..
நினைவில் வந்தது..

பல வழிகளில் முயற்சித்து.. ஒருவழியாக..
மெல்ல எட்டிப் பார்த்தது..!
அப்பாடா.. வந்தாச்சு.. பாத்தாச்சு..!
உப்ப்....
பெரிய நிம்மதிப் பெருமூச்சு......

உடலும், மனமும்.. இலேசானதை உணந்தேன்..

மற்ற வேலைகளை முடித்துவிட்டு..
சுறுசுறுப்படைந்தவனாய்...
முகமலர்ச்சியோடு வெளியேரினேன்..

நன்றாக விடிந்துவிட்டிருந்தது..!

காத்துக்கொண்டிருந்தனர் மேலும் இருவர்..
முடிந்ததா என்ற தலையசைப்பிற்கு..
ஒருவழியாக சுபமாக முடிந்தது என்று தலையசைப்பையே பதிலாக்கிவிட்டு..
புன்னகையுடன் நகர்ந்தேன்!

இனி ஒருநாள் முழுதும்..
பிரச்சனைகளின்றி.. பணியாற்ற உதவிய..

இந்த கழிவறை..
எனக்கு கோயிலாகப்பட்டது!